பரிணாம வளர்ச்சியின் படி நாமெல்லாம் வந்தது கடல் மிருகங்களிடமிருந்து. அதன் மிச்ச சொச்சமாக நம்மை எப்போதும் உப்பு நீர் சூழ இருக்கிறோம் (வியர்வை). மற்றும் நம் ரத்தத்தில், கடலில் உள்ள உப்புகளான சோடியம், பொட்டாஷியம், மக்னீஷியம் உள்ளன. சொல்லப்போனால் இந்த உப்புகளினால் தான் உயிரோடே இருக்கிறோம்[1].

உடலில் சராசரியாக 42லிட்டர் நீர் இருக்கிறது. இதை செல்லுக்குள் இருக்கும் நீர் (28Litres), செல்லுக்கு வெளியே இருக்கும் நீர் (14 L) (ரத்தம், ஜாயின்ட் சொல்யூஷன், etc.,) எனப் பிரிக்கலாம். நம் உடல் இயங்க நீர் தேவை. ஏனென்றால் அது தான் சத்துகள், ஹார்மோன்கள், ஏனைய கெமிக்கல்களை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு சேர்க்கிறது. செல்லுக்குள் இருக்கும் நீர், வெளியே இருக்கும் நீர் ஆகியவற்றை ஒழுங்கான அளவில் பேலன்ஸ் செய்ய சோடியம் தேவை. உப்பு சாப்பிட்டால் நீர் குடிக்க வேண்டும் (solvent drag), இந்த வினையால் தான் உடலில் உள்ள நீர்ச்சத்து பேலன்ஸ் ஆக இருக்கிறது.
உடலில் உள்ள தசைகள் (நாம் நடக்க, உட்கார, ஒரு பொருளை எடுக்க இருக்கும் சாதா தசைகள்), இதயம் எனும் தசை, மூச்சு விட தேவைப்படும் தசைகள், குடல் தசை என உடலில் உள்ள எல்லா தசைகளை ஆக்டிவேட் செய்ய அதற்கென ஒரு எலக்ட்ரிக் பொடன்ஷியல் வேண்டும். அதை தருவது செல்களின் சோடியம்-பொட்டாஷியம் சேனல்கள். இந்த சேனல்கள் எப்போதும் சோடியத்தையும்-பொட்டாஷியத்தையு ம் எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டே இருக்கும். இதனால் எலக்ட்ரிக் பொடன்ஷியல் கிடைக்கும். இது இருந்தால் தான் மூளையில் இருந்து “ஒரு பொருளை எடு” எனும் உத்தரவு வந்தால், கையில் உள்ள தசைகள் இயங்கி, ஒரு பொருளை எடுக்கும். நாம் எடுக்கும் உணவில் இருந்து வரும் 65% சக்தி இந்த சோடியம்-பொட்டாஷியம் சேனல்களுக்கே தேவைப்படுக்கிறது. இப்போது உடலில் உள்ள உப்புகளின் தேவை புரிகிறதா?
ஆராய்ச்சி கூடத்தில், எலிகள் சாதா நீரை தான் குடிக்கும். உப்பு நீரை குடிக்காது. எலிகளுக்கு உப்பு (சோடியம் குளோரைடு) குறைவான உணவுகளை ரெகுலராக கொடுத்த போது, அவை உப்பு வேண்டும் என வெறி கொண்டு அலைந்து, பின்னர் உப்பு நீர் கொடுத்தவுடன் நிறைய உப்பு நீரை குடித்தன[1]. சில சிறுவர்களுக்கு ADH சுரப்பி பிரச்சினை காரணமாக எக்கச்சக்கமாக சோடியம் யூரினில் வெளியேறும். அவர்களைப் பார்த்தால் வீட்டில் உள்ள உப்பை அள்ளி அள்ளி தின்பார்கள். நாம் இனிப்பு, காரம், கசப்பு, புளிப்பு சுவைகள் இல்லாமல் இருந்து விடலாம். ஆனால் உடலின் இயக்கத்திற்கு தேவையான உப்பினால், நாக்கில் உள்ள உப்பை உணரும் சென்ஷேசன் மிகவும் ஸ்டிராங்கானது. உப்பை வெகுவாக குறைத்தால் நம் நாக்கு உப்பிற்காக அலையும். அதனால் தான் உயிரோடு இருக்கிறோம்.
கற்கால மனிதர்கள் உணவில் எக்ஸ்ட்ரா உப்பை சேர்க்கவில்லை. மாமிசத்தில் இயற்கையாகவே உப்பு இருக்கும். அதை மட்டுமே உண்டார்கள். குளிர்காலங்களில் மாமிசத்தை பதப்படுத்த உப்பை பயன் செய்ய ஆரம்பித்து நான்காயிரம் வருடங்கள் ஆகிறது. இதனால் மனிதனின் உணவில் உப்பு ஒரு நாளைக்கு 18கிராம் வரை கூட இருபதாம் நூற்றாண்டில் இருந்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் உப்பிட்ட மீனை சாப்பிடும் ஸ்வீடன் நாட்டினரின் ஒரு நாள் ஆவரேஜ், நூறு கிராமிற்கும் அதிகமாக இருந்துள்ளது. ஃபிரிட்ஜ் கண்டுபிடித்தவுடன், உணவில் உள்ள உப்பின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இன்று ஆவறேஜாக மனிதன் 5-10கிராம் அளவிற்கு உப்பு சாப்பிடுகிறான் [1].
ஹைப்பர்டென்ஷன் எனப்படும் அதிக பிரஷர் உலகில் மூன்றில் ஒருவருக்கு இருக்கிறது; இது ஒன்று மட்டுமே மாரடைப்பினாலும் மற்றும் ஸ்ட்ரோக்கினாலும் வரும் 50% மரணங்களுக்கு காரணமாகிறது. பிரஷர் இருக்கும் பேஷண்டுகளில் 90-95% பேருக்கு அது எதனால் வருகிறது என்பதற்கான காரணம் இன்று வரை நமக்கு தெரியாது. அதனாலேயே அதை Essential hypertension என்கிறோம்.
ஒரு நீர் மோட்டார் பம்ப்பை எடுத்துக் கொள்வோம். அதில் வேகமாக நீர் பீச்சி அடிக்க வேண்டுமென்றால் பூமியில் இருக்கும் நீர் அதிகமாக இருக்க வேண்டும், மோட்டார் அதிக ஹார்ஸ்பவர் இருக்க வேண்டும், நீர் வரும் குழாய் சிறிதாக இருக்க வேண்டும். BP = cardiac output x Vascular resistance. அதாவது நம் பிரஷர் இரு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று இதயம் எவ்வளவு ரத்தத்தை பம்ப் செய்கிறது என்பது; இரண்டாவது நம் ரத்தக்குழாய்கள் எந்த அளவிற்கு விரிந்து கொடுக்கிறது என்பது.
அதிக லிட்டர் ரத்தம் இருக்க காரணம்-உடலில் அதிகம் நீர் இருப்பது; ரத்தக் குழாய்கள் எலாஸ்டிக் தன்மையுடன் இருக்கும். எலாஸ்டிக் தன்மை இல்லையென்றால் விரிந்து கொடுக்காது. இந்த எலாஸ்டிக் தன்மை குறைய பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் பல கண்டுபிடிக்கப்படாததால் தான் இன்னும் பிரஷரை esssential hypertension என்கிறோம்.
மாடர்ன் மருத்துவத்தின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். உப்பு அதிகம் சாப்பிட்டால் உடலில் நீர் சேரும். அப்போது ரத்த வால்யூம் அதிகரிக்கும், பிரஷர் வரும். “உப்பு அதிகம் சாப்பிடாதர்வர்களுக்கு பிரஷர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டால், அதற்கும் பதில் ரொம்ப சிம்பிள்- “ஜெனிடிக் பாஸ்”. நமக்கு தெரியவில்லை என்றால் பேஷன்ட் மேலும், அவர் பரம்பரை மேலும் பழியை போட்டுவிடலாம். அதற்கு மேலும் கேட்டால் “essential hypertension னுக்கு காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்பதே பதிலாக வரும் (எங்களுக்கு இன்று வரை சொல்லித்தரப்பட்டது இது தான்). இதில் ஓரளவு உண்மை உண்டு. பல ஆராய்ச்சிகள், உணவில் உப்பை குறைத்தால் ஓரளவு பயன் இருக்கிறது என கூறுகின்றன. ஆனால் ஓரளவிற்கு தான். முழுமையாக இல்லை. அது ஏன் எனப் பார்ப்போம்.
கொஞ்சம் யோசிப்போம். நம் முன்னோர்கள் உணவில் உப்பை அளவாக சாப்பிட்டார்களா? அல்லது நன்றாக சாப்பிட்டார்களா? “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என எழுதியவன் பிரஷரிலா மாண்டான்? அவர்களுக்கு இல்லாத பிரஷர் அதே உப்பை தின்னும் நமக்கு எப்படி வரும்?
உப்பினால் தான் பிரஷரே என்று உலகமே கொடி பிடிக்க, கவாசாகி என்ற விஞ்சானி தான் ஒரு பயங்கரமான உண்மையைக் கண்டுபிடித்தார். அவரின் ஆராய்ச்சியில் உலகில் இருப்பவர்களை “உப்பு சென்சிடிவ்” மற்றும் “உப்பு ரெசிஸ்டன்ட்” என இருவகை இருப்பதை கண்டுபிடித்தார். அதாவது உணவில் உப்பு அதிகம் சேர்த்தால் சிலருக்கு(10-50%) பிரஷர் கூடும் (சென்சிடிவ்). சிலருக்கு(50-90%) பிரஷர் அதிகமாகாது (ரெசிஸ்டன்ட்) [2]. இது தெரியாமலேயே பிரஷர் இருக்கும் அனைவருக்கும் உப்பைக் குறைக்க வேண்டும் என பல மருத்துவ அசோசியேஷன்கள் கூறுகின்றன. மனிதனுக்கு நெருக்கத்தில் உள்ள சிம்பன்சியிலும் இதே இரண்டு வகை உள்ளது.
உப்பு சென்சிடிவ் நபர்களுக்கு இரு பிரச்சினைகள் உள்ளன. 1. அவர்கள் கிட்னியால் அதிக உப்பை வெளியேற்ற முடியாது. அதனால் உடலில் உப்பு மற்றும் நீர் அதிகமாகி பிரஷர் கூடும். 2. இவர்கள் ரத்தக் குழாய்களில் இருக்கும் செல்கள், ரத்தத்தில் இருக்கும் உப்பை குறைக்க முடியாமல் டேமேஜ் ஆகியிருக்கின்றன [3](சாதாரணமாக இந்த செல்கள் சோடியம் அளவைக் குறைக்கும்). இதனால் இவர்களுக்கு உப்பு அதிகம் எடுத்தால் பிரஷர் அதிகரிக்கும்.
முதலில் ரத்தக் குழாய் டேமேஜிற்கு செல்வோம். சர்க்கரையில் உள்ள பிரக்டோஸ், பிரஷரை வரவழைக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. உடலில் நீரை தேக்கி வைப்பது முதல் ரத்தக் குழாய் செல்களை டேமேஜ் செய்வது வரை இது செய்யும்[4]. மாவுச்சத்து உணவில் உள்ள க்ளுக்கோஸ் மற்றும் ஒமேகா 6 கொழுப்பும் ரத்தக்குழாய் செல்களை டேமேஜ் செய்யும்[*].
இன்னொரு ஆராய்ச்சியில் இந்த உப்பு சென்சிடிவ் நபர்களுக்கு, அதிகளவு இன்சுலின் உற்பத்தி மற்றும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் இருப்பதை கண்டறிந்துள்ளார்கள் [5]. இவர்களுக்கு க்ளுக்கோஸ் கொடுத்தால் பிரஷர் ஏறுகிறது. இவர்கள் உப்பு சாப்பிட்டாலும் இன்சுலின் ஏறுகிறது. என்ன புரியவில்லையா? தெளிவாக சொல்கிறேன். அதாவது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், சர்க்கரை என மாவுசத்து சாப்பிட்டால், இன்சுலின் ஏறும். இன்சுலின் ஏறினால் இன்சுலின் எதிர்ப்பு நிலை (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) உயரும். இன்சுலின் கூடினால்-உப்பு சென்சிடிவிடியும் கூடும். பிரஷர் கூடும். நாம் இன்று சாப்பிடும் ரெகுலர் மாவுச்சத்து உணவுகள் பலருக்கு நாளை உப்பை தாங்க முடியாதவர்களாக ஆக்குகிறது [*].
இரண்டாவதாக, உப்பு சென்சிடிவ் நபர்களுக்கு ஏன் அதிகமான உப்பை கிட்னியால் வெளியேற்ற முடியவில்லை? தெரியாது. என்னுடைய அனுமானம் என்னவென்றால் மாவுச்சத்து மற்றும் சர்க்கரைகள், கிட்னிக்கு போகும் ரத்தக்குழாய் செல்களை டேமேஜ் செய்வதால் அவர்களுக்கு உப்பை வெளியேற்றும் ஆற்றல் குறையலாம்[*]. இவர்கள் கார்ப் சென்சிடிவ் மக்களாவர். அதாவது சிலரால் அதிக மாவுச்சத்தை தாங்கிக் கொள்ள முடியும். சிலரால் முடியாது. (எ.கா ஒரே உணவை எடுக்கும் இருவரில், ஒருவருக்கு ஒன்றுமே ஆவதில்லை, இன்னொருவர் குண்டாகிறார் இல்லையா? அது போல).
DASH diet (Dietary approaches to stop hypertension) என்ற ஆராய்ச்சியில் உணவில் பெருமளவு உப்பைக் குறைத்து பார்த்ததில் வெறும் 3-5mm அளவே பிரஷர் குறைந்தது. ஆனால் அதைத் தொடர்ந்த OMNIHEART ஆராய்ச்சியில்[6], மாவுச்சத்தை 10% உணவில் குறைத்த போது பிரஷர் இன்னும் நன்றாக குறைந்தது. இப்போது சொல்லுங்கள்-பிரஷர் உப்பினாலா? இல்லை மாவுச்சத்து உணவினாலா? இந்த OMNIHEART ஸ்டடியே போதும், மேலே நான் மாவுச்சத்து மேல் வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக.
காஷ்மீரில் 2014ல் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி, essential hypertension இருப்பவர்களுக்கு, நார்மல் ஆட்களை விட இன்சுலின் இரு மடங்கு அதிகம் இருப்பதாக சொல்கிறது [7].
இந்த உப்பு சென்சிடிவ் ஆட்களுக்கு பொட்டாஷியம் கொடுத்தால், கிட்னி அதிக சோடியத்தை வெளியேற்றி பிரஷரை குறைக்கிறது [3].
இந்த என் குழப்பமான கட்டுரையில் இருந்து நாம் அறிவது என்ன?
1. Essential Hypertensionனுக்கு காரணம் மாவுச்சத்து எடுப்பதால் அதிகரிக்கும் இன்சுலின் காரணமாக இருக்கலாம்.
2. பிரஷர் பேஷண்டுகளில் இருவகை உண்டு. சால்ட் சென்சிடிவ் நபருக்கு உப்பு சாப்பிட்டால் பிரஷர் கூடும். சால்ட் ரெசிஸ்டன்ட் நபருக்கு உப்பு சாப்பிட்டால் பிரஷர் கூடாது.
3. உப்பை வெகுவாக குறைத்தாலும் கிட்னி பெயிலியர் இருப்பவர் தவிர மற்றவர்களுக்கு பெரிதாக பயன் கிடையாது.
4. மாவுச்சத்தை குறைத்தால் பிரஷர் நன்றாக குறைய வாய்ப்புள்ளது
நாம் செய்ய வேண்டியது என்ன? [*]
1. பிரஷர் இருக்கிறதோ இல்லையோ, முதலில் இன்று பிரஷர் பாருங்கள். உங்கள் உணவில் (எந்த டயட்டாக இருந்தாலும் அல்லது ரெகுலர் உணவாக இருந்தாலும் சரி) உப்பை ஒரு வாரம் அதிகரியுங்கள். ஒரு வாரம் கழித்து மறுபடி பிரஷர் பாருங்கள். அது 5-10 பாயின்ட் கூடியிருந்தால் நீங்கள் சால்ட் சென்சிடிவ். கூடவில்லை என்றால் சால்ட் ரெசிஸ்டன்ட் ஆவீர்கள்
2. சால்ட் ரெசிஸ்டன்ட் நபராக இருப்பின், உங்கள் பிபி உப்பினால் அல்ல. தேவையான அளவு உணவில் உப்பு எடுக்கலாம். பிரஷர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.
3. சால்ட் சென்சிடிவ் (உப்பு சாப்பிட்டால் பிரஷர் கூடுகிறது) நபராக இருப்பின், உப்பைக் குறைத்து ரெகுலர் உணவு சாப்பிட்டு மாத்திரை எடுக்கலாம். உங்களுக்கு பேலியோ டயட்டில் டக்கென பிரஷர் நார்மலாக வாய்ப்புள்ளது.
4. சால்ட் சென்சிடிவ் நபராக இருப்பின்-உப்பைக் குறைக்காமல் மாவுச்சத்தை குறைக்கும் பேலியோ டயட் எடுக்கலாம். அதில் பிரஷர் குறையவில்லை என்றால் மட்டுமே பேலியோவில் உப்பைக் குறைக்கவும். (என் அனுபவத்தில் 90% மக்களுக்கு பேலியோவே பிரஷரை நார்மல் ஆக்குகிறது. பாக்கி 9.9% பேருக்கு பேலியோவில் உப்பைக் குறைத்தால் பிரஷர் குறைகிறது. 0.1% மக்களுக்கு என்ன செய்தாலும் பிரஷர் குறைவதில்லை)
5. சால்ட் சென்சிடிவ் நபர்கள் பேலியோ மூலம் உடல் எடைக் குறைப்பு, hscrp குறைப்பு, சுகர் குறைப்பு, குறட்டை குறைப்பு, நல்ல தூக்கம் பெறுதல், அதிக பொட்டாஷியம் பெறுதல் ஆகியன மூலமும் பிரஷரை குறைக்க முடியும்.
6. உப்பு ரெசிஸ்டன்ட் பேஷன்டுகள் உணவில் உப்பைக் குறைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
7. பல்வேறு சமயங்களில் மாவுச்சத்து சாப்பிட்டால் எப்படி இன்சுலின் எகிறி பிரஷரை அதிகப்படுத்துகிறது, பேலியோ மூலம் இன்சுலின் குறைந்து நார்மலாகும் என்பதை கூறியிருக்கிறேன். அந்த போஸ்டுகள் வீடியோக்களை தேடிப் பார்த்து பயன் பெறவும்.
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.












Leave a Reply