நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

இன்சுலின் என்பது கணையத்தில்உற்பத்தியாகி, ரத்த ஓட்டத்தில்கலக்கும் முக்கிய ஹார்மோன்ஆகும்.இது ரத்தத்தில் சர்க்கரையோடுகலந்து மனிதர்கள்செயல்படுவதற்க்குத் தேவையானஆற்றலை கொடுக்கிறது. இன்சுலின்பற்றாக்குறை ஏற்படும் நிலையில்,ரத்தசர்க்கரை அளவு அதிகரிக்கிறது . விளைவு “தீர்வில்லா சர்க்கரை நோய்.
இன்சுலின் (Insulin, இலத்தீன மொழியில் இன்சுலா எனில் தீவு எனப் பொருள்படும்) ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இதனை கணையத் திட்டுக்களில் உள்ள பீட்டா கலங்கள் உருவாக்குகின்றன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள்மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.
இன்சுலின் உடலின் வளர்வினை மாற்றத்திற்கான முதன்மை இயக்குநீராகும்.
- இது கார்போவைதரேட்டுக்கள், கொழுப்புக்கள் மற்றும் புரதங்களின்வளர்சிதைமாற்றத்திற்
குகாரணமாகின்றது. முக்கியமாக, குருதியிலிருக்கும் குளுக்கோசைகல்லீரல், கொழுப்புக் கலங்கள், எலும்புத்தசை கலங்கள் உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றது.[2]இந்த திசுக்களில் உட்கொள்ளப்பட்ட குளுகோசு கிளைக்கோஜெனிசிஸ்வழியாக கிளைக்கோசனாகவோஅல்லது லிப்போஜெனிசஸ் வழியாக கொழுப்புக்களாகவோ (டிரைகிளிசரைடுகள்) மாற்றப்படுகின்றன; கல்லீரலில் இரண்டுமே நடக்கிறது. - குருதியில் இன்சுலின் அளவு கூடுதலாக இருந்தால் கல்லீரல் தயாரிக்கும் குளுக்கோசும் வெளிப்பாடும் தடுக்கப்படுகிறது.
- குருதியில் சுற்றிவரும் இன்சுலினின் அளவு பல்வேறு திசுக்களிலும் புரதங்களின் உருவாக்கத்தில் தாக்கமேற்படுத்துகின்றது. எனவே இது ஓர் வளர்வினை இயக்குநீராகும் – குருதியிலுள்ள சிறு மூலக்கூறுகளை திசுக்களில் பெரிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்குப் பயன்படுகின்றது. இரத்தத்தில் குறைந்த இன்சுலின் அளவுகள் இருந்தால் நேரெதிராக பரவலான சிதைமாற்றம் நடந்து உடல் கொழுப்பு சேகரிப்பு சிதைகிறது.
இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?
இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.
இன்சுலினின் வகைகள்
இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.
இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப்படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
…. தேசிய நீரிழிவு ஆய்வு மையம்….












Leave a Reply