கலோஞ்சி விதைகள் என அழைக்கப்படும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை பட்டியல் இட முடியாத அளவுக்கு உடல்நலம் காக்கிறது. உயிரைப் பறிக்கும் கொடும் வியாதிகள் அத்தன்னைக்கும் இதனை உட்கொண்டால் கட்டுபாட்டில் உள்ளது. பக்கவிளைவுகள் இல்லாத இதைவிட சிறந்த மருந்து வேறு எதுவும் உண்டோ?

இரத்த அழுத்தம் குறையும்:
உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக நம்மை மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது இருதய நோய்கள் , பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஆகவே சுடுநீரில் கருஞ்சீரகம் போட்டு அருந்துவது மிக எளிமையான வழிமுறை.
பற்கள் வலுவானதாக மாற்றும் :
கருஞ்சீரகமானது ஒட்டுமொத்த பற்கள் சார்ந்த நோய்களைத் தீர்க்கும் அதாவது பல்ஈறுகளில் இரத்தம் வடிதல் , பல் வேர்களையும் வலுவாக்குகிறது.கருஞ்சீரக எண்ணெய் தொட்டு பற்களைத் துலக்குவது சிறப்பு.கருஞ்சீரக எண்ணெய் மற்றும் வினீகர் சேர்த்து மவுத் வாஸ் போல பயன்படுத்தலாம்.
உடல் எடை குறைக்க:
கருஞ்சீரகம் உட்கொள்ளும் போது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். இறக்கி குடிக்கும் சூட்டில் தேன் அல்லது தேன் இல்லாமல் குடிக்கும் போது உடல் எடை குறையும். இதனை தினசரி மூன்று வேளை பருகும் போது வெகுவேகமாக உடல் எடை குறையும்.
மலச்சிக்கல் மற்றும் மூலநோய் குணமாகும்:
மலச்சிக்கல் மற்றும் மூலநோய் என்பது முழுக்க முழுக்க செரிமான கோளாறுகள் மற்றும் நார்ச்சத்து குறைவான உணவால் வருவது தான். ஆரம்பகால மலச்சிக்கல் மற்றும் மூலநோய் கை வைத்தியம் மற்றும் உணவுப்பழக்கத்தாலே மாற்றி விடலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்து கொள்ளவும். பருப்பு தாளிக்கும் போது நபருக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் ஒரு டீஸ்பூன் கடுகும் சேர்த்து தாளிக்கவும். கருஞ்சீரகத்தை பொடிசெய்து சுடுதண்ணீரில் கலந்து பருகலாம்.
மூலநோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் வினீகர் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் கலந்து தடவும் போது எரிச்சல் நீங்கி குளிர்ச்சி தரும்.
கல்லீரல் சக்தி பெற:
மஞ்சள் காமாலை , குடி நோயாளிகள் , கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் , நீண்ட நாட்களாக ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு கல்லீரல் பலவீனம் அடைந்து இருக்கும். கல்லீரல் வலுவடைய எந்த வித பக்க விளைவுகள் இல்லாத இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கலாம். ஓமம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகலாம். ஒரு டீஸ்பூன். அளவில் பாதி அளவு கருஞ்சீரகம் போதுமானது.












Leave a Reply