தக்காளியைத்தான் நாம் தினசரி உணவில் பயன்படுத்தி வருகிறோம். நவீன உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இது உணவுகளுக்கு ருசியையும், நறுமணத்தையும் கொடுக்கிறது.இக்கனியை பச்சையாக அப்படியே சாப்பிட்டு வந்தாலே போதும் நமது தேகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இப்பழத்தில், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன. இதிலுள்ள லைகோபீன் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிக்கும்.

தக்காளியின் மருத்துவப் பயன்கள்:
- இதிலுள்ள விட்டமின் கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலைப் போக்குகிறது.
- இரத்தத்தை சுத்தமாக்கும்.
- எலும்புகளுக்கு உறுதி சேர்த்து பலமாக்கும்.
- நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
- தோலை பளபளப்பாக்கி மெருகேற்றும்.
- பற்களும், ஈறுகளும் வலிமை பெற தக்காளி மிகவும் நல்லது.
- தக்காளி மலச்சிக்கலை நீக்கும்.
- வயிற்றில் உள்ள குடற்புண்களை ஆற்றும்.
- வெயில் காலத்தில் ஏற்படும் களைப்பைப் போக்கும்.
தக்காளி பழச்சாறு:
நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழச்சாறு.
தக்காளி ஜாம் :
இது சப்பாத்தி, ரொட்டி, இட்லி, தோசை, பூரி போன்ற சிற்றுண்டிகளுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
இது குழந்தை முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணலாம்.
பல்வேறு சுவையில் தக்காளிச் சாறு:
தக்காளியை அரைத்து அந்தச் சாற்றினை வடிகட்டி கொள்ளவும்.
பிறகு அரைத்து கலந்து வைத்துள்ள தக்காளிச் சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் இந்துப்பு கலந்து குடியுங்கள்.
உப்புக் கலந்த இந்த தக்காளி, எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்:
சரும செல்களுக்கு புத்துயிர் அளித்து வயதாகும் செயற்திறனை தடுக்கும். இதனால், சருமம் மென்மையாக இருக்கும்.
உடலில் அதிகப்படியாக சேரும் கொலஸ்ட்ராலை கரைக்க பயனளித்து, உடல் எடை கூடாமல் பாதுகாக்க உதவும்.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்துவதால் இதய நலனும் மேலோங்கும்.
தொண்டை, கண் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கிறது.
செரிமானப்பிரச்சனைகளுக்கு குறைக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
குறிப்பு:
சிறுநீரக கற்கள் பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஜூஸை குடிக்க வேண்டாம்.












Leave a Reply