அரிசியை பிரதானமாக உண்ணும் வழக்கம் உள்ள நமக்கு எப்போதும் லேசாக மனதில் பயம் உண்டு. எப்போது வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வரலாம் என்பது தான். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் , காரணங்கள் , மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்ளும் போது சர்க்கரை நோயினைப்பற்றிய விழிப்புணர்வு வரும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் நோயுற்று நீடூழி வாழலாம்.அந்த வகையில் சமீபத்திய ஆய்வுகள் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயை தள்ளிப் போடலாம் என்று கூறுகின்றனர்.

குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால் புளிப்பு பொருட்களின்(தயிர்) அனைத்து வகைகளும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் வருவதற்கான 24 சதவிகித வாய்ப்பைத் தடுக்கின்றன என்று லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.
தயிர் ஏன் நல்லது?
பால் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அனைத்தும் பால் பொருட்களில் இருக்கின்றன. ஆனால் கொழுப்பு சத்தும் அதில் நிறைவாக இருப்பதால் ஊட்டச்சத்து நிபுணர்கள் சிலருக்கு இவற்றைக் குறைவாக உபயோகிக்கும்படி தெரிவிக்கின்றனர். ஆனால் குறைந்த கொழுப்பு கொண்ட மற்ற பால் உற்பத்திப் பொருட்களுடன் ஒப்பிட்டால் நீரிழிவினைத் தவிர்ப்பதற்கான அதிக அளவு வாய்ப்பு இதில் தென்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சிற்றுண்டிகளுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் நீரிழிவைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளிக்க வைக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின்-டி, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன. மேலும் நொதித்தல் பலனாக உருவாகும் வைட்டமின்-கே, புரோபயாடிக் பாக்டீரியாக்கள் நீரிழிவு நோய்க்கெதிரான நல்ல பலன்களைத் தரும் என்று கூறுகின்றனர். தயிரில் உள்ள பாக்டிரியாக்கள் செரிமானத்தை சீராக்குகிறது இதன் விளைவாக குளுக்கோஸ் மெட்டபாலிசம் தாமதமாக நடைபெறும் ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது.
செயற்கை இனிப்பூட்டிகள்:
இனிப்புகளில் சேர்க்கப்படும் வெள்ளை
சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் நமது உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே.
நமக்கு கிடைக்கும்போது தயிர் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நமது உடலுக்கு நன்மை தரும் என்பதை தெரிவிக்கும் தயிரினைப் பற்றிய
இத்தகைய ஆய்வுகள் நமது வாழ்க்கை தரத்தை நோயற்ற வாழ்வாக மாற்றுகிறது.












Leave a Reply