நமது சமையல் அறையில் உள்ள அனைத்துப் பொருட்களும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் தான் சமையலில் பயன்படுத்துகிறோம். அதில் பூண்டு பிரதானம். பூண்டு இல்லாமல் பெரும்பாலும் இந்தியர்கள் உண்பதில்லை வெகுசில குடும்பங்கள் பூண்டினைத் தவிர்க்கிறார்கள்.

தேவையான பொருட்கள் :
தனித்தனியாக தோல் உரித்து எடுக்கப்பட்ட பூண்டு பற்கள்கள் 20 தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)
செய்முறை
பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். ஈரமில்லாத கரண்டி மூலம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்மைகள் :
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
தேன் பூண்டு உண்ணும் முறை :
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு தேன் பூண்டு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.சர்க்கரை நோயாளிகள் உங்கள் சர்க்கரையின் அளவை கருத்தில் கொண்டு இதனைப்பயன்படுத்த வேண்டும்.
ஏன் இதனை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்?
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயல் திறனை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. காலை மட்டும் அல்ல நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.
பூண்டு தேன் நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து அன்றாடம் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உதவும்.
பூண்டு உலகெங்கும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. பூண்டு வெங்காயம் குடும்பத்தை சேர்ந்தது.இதிலுள்ள allicin and diallyl sulfides என்பதே மருத்துவ பலன்களை தருகிறது.இந்த சல்பர் தொகுதி தனிமங்கள் தான் நுண்ணுயிர் கொல்லியாகவும் , பூஞ்சை கொல்லியாகவும் செயலாற்றுகிறது.
பூண்டை பல்வேறு விதமாக உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அதன் முழுப் பலன்களைப் பெற பச்சையாக சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.பூண்டின் பிரத்யேக வாசனையால் அதனை பச்சையாக உண்பதற்கு தயங்குபவர்களுக்கு தேனில் ஊறிய பூண்டு மாற்று வழி ஆகும்.












Leave a Reply