தோட்டத்தின் அழகு என்பது பல நிறங்களில் பூக்கும் பூக்கள் தான்.
அதிலும் அலங்காரத் தாவரங்கள் பூக்களுக்காக மட்டுமே வளர்த்தும் போது , செடிகள் ஆரோக்கியமாக இல்லாமல் பூக்களும் பூக்காமல் இருந்தால் தோட்டம் பொலிவிழந்து போகும்.

பூக்கும் தன்மையை பாதிக்கும் காரணிகள் :
சமயங்களில் பூக்களின் எண்ணிக்கை குறைந்து அல்லது அறவே பூக்காமல் போவதுண்டு. செடிகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருந்தா , சூரிய ஒளி, தண்ணீர் பற்றாக்குறையால் பூக்கள் எண்ணிக்கை குறையும் .
பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்!
பூக்கும் தாவரங்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து மணி நேரம் சூரிய ஒளி தேவை. தண்ணீர் தேங்காமல் அளவாக ஊற்ற வேண்டும். தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உரங்கள் தொடர் இடைவேளையில் அளிக்க வேண்டும். நோய் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்.
என்னென்ன உரங்கள் தேவை?
* NPK எனும் நைட்ரஜன் பொட்டாசியம் பாஸ்பரஸ் மிகவும் அவசியம். செடிகளின் வேர்களின் வளர்ச்சி , பசுமையான இலைகள் , பூக்கள் எண்ணிக்கை அதிகரிக்க இந்த மூன்று சத்துக்கள் மிகவும் அவசியம்.
கடைகளில் கிடைக்கும் ரோஸ் மிக்ஸரில் நைட்ரஜன் , பாஸ்பரஸ், பொட்டாசியம் , உள்ளது என்பதால் பதினைந்து நாட்கள் ஒரு முறை ரோஸ் மிக்ஸர் செடிகளின் வயதுக்கு ஏற்ப வைக்கலாம்.
நைட்ரஜன் சத்து மிகுந்த காபித்தூளை தண்ணீரில் கலந்து வாரம் ஒருமுறை அளிக்கலாம்.
உபயோகித்த டீத்தூள் பேக் அல்லது டீத்தூளை ஓரிரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அதனை செடிகளுக்கு ஊற்றலாம். டீபேக்கை அப்படியே செடிகளுக்கு வைக்க கூடாது ஏனெனில் டீ பேக் “பாலிபுரைப்பைல்”, ஆனது இந்த பைகள் மண்ணில் மக்குவதற்க்கு நாளாகும். உபயோகித்த டீத்தூளை பூஞ்சை வராமல் இருக்க பெரும்பாலும் மட்கவைத்து உபயோகிப்பது மிகவும் நல்லது.
பாஸ்பரஸ் :
bone meal கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் இதனை செடிகளுக்கு அளிக்கும் போது அதற்கு தேவையான பாஸ்பரஸ் எளிதாக கிடைக்கும்.
பொட்டாசியம் :
வாழைப்பழத்தோல்களை நறுக்கி செடிகள் வேரின் அருகே புதைக்கலாம் அல்லது கொதிக்கும் நீரில் வாழைப் பழத்தோல்களைப் போட்டு தண்ணீர் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை ஆறவிட்டு செடிகளுக்கு பாய்ச்சலாம்.
இயற்கை உரங்களை அளிப்பது மண்ணின் வளத்தை அதிகரிக்கும் மேலும் தொட்டி செடிகளுக்கு உரங்கள் மிகவும் அவசியம் .
கவாத்து செய்தல் (pruning) :
காய்ந்த பூக்கள் உள்ள கிளை , பூக்காம்புகளை உடனுக்குடன் நீக்க வேண்டும். அடர்ந்த கிளைகள் இருந்தால் தேவையற்ற கிளைகளை கவாத்து செய்தல் அவசியம். ஆரோக்கியமான பூக்கள் மலரும். செடியின் பாரம் குறையும்.














Leave a Reply