நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
சோம்பலான வாழ்க்கை முறையினால் தான் நீரிழிவு நோய் வருகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

எந்த வகை உடற்பயிற்சி நல்லது?
அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப நடைப் பயிற்சி, ஜாக்கிங், நீச்சல் பயிற்சி என்று திட்டமிட்டு கொள்ளவும்.வாரம் இரண்டரை மணி நேரம் கட்டாயம் நடக்கவேண்டும். தினசரி அரைமணி நேரம் நடைப்பயிற்சி என்பது அவசியம். பாஸ்டிங் சுகர் அளவு குறைக்க வேண்டும் என்றால் இரவு உணவிற்கு பிறகு அரைமணி நேரம் நடைப்பயிற்சி அவசியம்.
உடற்பயிற்சியால் இன்சுலின் அளவை குறைக்க இயலுமா?
உடற்பயிற்சி செய்யும் போது உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் அளவை மட்டுமே கொண்டு க்ளுக்கோஸ் ஆனது செல்களுக்கு உணவாக செல்கிறது. இதனால் இன்சுலின் அளவை குறைக்க அல்லது அறவே தேவையில்லை எனும் நிலை வருகிறது. ஆரோக்கியமான நபர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
இன்சுலின் அளவு சீராக இருக்கும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாற்றப்படுகிறது.
உடற்பயிற்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடையைக் கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி உதவுகிறது.
நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வு நமக்கு புத்துணர்ச்சி தரும்.
உணவில் உள்ள க்ளுக்கோஸ் ஆனது ஆற்றலாக மாறி செலவழிக்கப் படுகிறது
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை:
உங்கள் உடல்நிலைக்கேற்ற பயிற்சியை உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்து அதன் பின்னர் செய்வது நல்லது.
ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் மட்டும் செய்து நிதானமாக உடற்பயிற்சிக்கான நேரத்தை அதிகரித்து தவறாமல் செய்யவும்.
மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ள உடல்நிலை ஒத்துழைத்தால் மட்டும் செய்யவும்.
காலி வயிற்றுடன் ஒரு போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் சர்க்கரையின் அளவு அளவுக்கு அதிகமாக குறையும் போது அபாயநிலை ஏற்படும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை:
நடைப்பயிற்சிக்கென்று வீட்டிற்கு வெளியே செல்பவர்கள் கையில் மொபைல் போன் , வீட்டு விலாசம் , சாக்லேட் உடன் செல்வது நல்லது.
உடற்பயிற்சி செய்த அன்று இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு என்று குறித்து வாருங்கள்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் இருக்க கூடாது.
நரம்பு பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு இருந்தால் அவசியம் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.












Leave a Reply