பாஸ்டிங் சுகர் (Fasting Blood Sugar Level) அளவைக் குறைப்பது இவ்வளவு ஈஸியா?

ஆசிய நாடுகளில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். சர்க்கரை நோய்களுக்கு புதிது புதிதாக மருந்துகள் வந்தாலும் நோயின் தாக்கம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் தரும் பக்கவிளைவுகளால் ஏற்படும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மரணமடைகிறார்கள். ஆனால் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதனை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம் என்பது வரப்பிரசாதம்.

காலை வெறும் வயிற்றில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க சர்க்கரை நோயாளிகள் பெரும் பாடுபட வேண்டும். ஆனால் எளிதாக நம்மிடையே கிடைக்கும் ஒரு உணவுப் பொருளால் சர்க்கரையின் அளவு குறையும் , அதனைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சப்ஜா விதைகள் :

நமக்கு நன்கு அறிமுகமான கருப்பு நிற விதைகள் தான் சப்ஜா விதைகள் அல்லது திருநீற்றுப் பச்சிலை விதைகள். சர்பத் , பலூதாவில் சப்ஜா விதைகள் கலந்து பரிமாறுவது உண்டு. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும்
இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும். நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள் கூட சப்ஜா விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டு சர்க்கரை நோய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

காலை நேர சர்க்கரை அளவை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

உணவிற்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது கூட எளிது ஆனால் காலை வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவை குறைக்க மிகவும் முயற்சி செய்ய வேண்டும். அவையாவன:
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரவு உணவிற்கு பிறகு முப்பது நிமிடங்கள் நடக்க வேண்டும்.
கார்போஹைட்ரேட் இல்லாத வகையில் உணவுகளை உண்ண வேண்டும்.

சப்ஜா விதைகள் ஏன் நல்லது?

சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
மலச்சிக்கலை நீக்கும் மேலும் செரிமான பாதையில் உள்ள கோளாறுகளை நீக்குகிறது. உடல் சூட்டை தணித்து சிறுநீரை வெளியேற்றுகிறது. உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டை க்ளுக்கோஸாக மாறுவதை தாமதாமாக்குகிறது. ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

சப்ஜா விதைகளை எப்படி எல்லாம் உணவில் சேர்த்துக் கொள்வது?

தேங்காய் பாலில் சப்ஜாவிதைகளை குறைந்தது அரை மணி நேரம் வரை ஊறவைத்து , அனைத்து விதைகளும் நன்கு ஊறிய பிறகு அதில் கொய்யா , அன்னாசி , வாழைப்பழம் போல ஏதாவது ஒன்றை நறுக்கி அதனைக் கலந்து உண்ணலாம். இரவு உணவாக இதனை எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரையின் அளவு குறையும். இரண்டு ஸ்பூன் அளவு ஒரு நபருக்கு போதுமானது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *