எல்லோருக்கும் பெறத்துடிக்கும் ஆசைகள் , அடைய நினைக்கும் கனவுகள் , வெறித்தனமான உழைப்புடன் லட்சியங்கள் என்று இருக்கும். ஆனால் நினைப்பது எல்லாம் யாருக்கும் நடப்பதில்லை. காலம் கடந்த பிறகு தான் தோன்றும் , அப்பாடி தப்பித்தோம் நல்லவேளை நாம் நினைத்தது நடக்கவில்லை.ஆனால் சில ஆசைகள் நாம் எந்த முயற்சிகளும் எடுக்காமலே நிறைவேறும்.அது எப்படி ?

பிரபஞ்ச விதி :
ஒரு பொருளை வேண்டி பிராத்தனை செய்யும்போது அது இந்த பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களை வந்தடைந்தே தீரும், இதுதான் பிரபஞ்ச நியதி.
இதற்க்கு ஒரு உதாரணத்தை காண்போம் வாருங்கள்.
ஒரு பெண்மணி தனது தோட்டத்தில் நான்கு மூலைகளிலும் ஒருவகை ரோஜா செடியை நட வேண்டும் என ஆசைப்பட்டாள்.
ஆனால் துரதிஷ்டவசமாக அது வேறு பிரதேசத்தில்தான் கிடைக்கும்.அவ்வளவு தூரம் போய்வர அவளுக்கு வசதியில்லை.
இருப்பினும் அது கிடைத்தே ஆக வேண்டும் என உறுதியாக வேண்டி தனது விருப்ப சக்தியை ஊட்டி வந்தாள். அதாவது தனது வீட்டில் அந்த செடி இருப்பது போல கற்பனை செய்து வந்தாள். அதற்கு நீரூற்றி , உரம் வைத்து என்று அனுதினமும் அதன் மீதான சிந்தனைகள் அதிகரித்தது.
ஒருநாள் கடற்கரையில் உலாவும்போது அவள் நினைத்த அதேவகையை சேர்ந்த நான்கு செடிகள் நீரில் மிதந்து வர, அதை எடுத்து சென்று வீட்டில் நட்டு பூரிப்படைந்தால். இதில் தான் பிரபஞ்ச சக்தி உள்ளது.
எங்கே அந்த செடிகள் கிடைக்குமோ அங்கிருந்து வந்த கப்பலில் ஒருவர், அதை வாங்கி வர அது கைநழுவி கீழே விழ அதுவே அலைகளால் அடித்து வந்து கரைகளில் ஒதுங்கியது.
இது போல் உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமே அதில் விருப்ப சக்தியை ஊட்டி வாருங்கள் போதும்.
நிச்சயம் ஒருநாள் அதை நீங்கள் எந்த வழியிலாவது அடைந்தே தீருவீர்கள்.
இந்த விதி பொருட்களுக்கு மட்டும் அல்லாமல் லட்சியங்கள் , அன்பு , காதல் , என அனைத்து நியாயமான ஆசைகளும் நிறைவேறும்.
இதைத்தானே அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார். ஓர் உயர்ந்த லட்சியம் அல்லது வெற்றி பெற்ற மனிதனின் உழைப்பின் பின்
ஓர் அழகான கனவு இருந்திருக்கும்.அவரையும் அறியாமல் தனது கனவுகளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்திருப்பார். காலம் அனைவருக்குமான வாழ்க்கையை தந்து விடும்.














Leave a Reply