பிறர் பிழை மறைத்தல்/மறத்தல் குற்றமா?

மனிதர்களாகிய நாம் குற்றம் இழைப்பவர்களாகவே படைக்கப்பட்டுள்ளோம்
குற்றமற்ற
குறையற்ற மனிதனை கண்டறிவது சாத்தியமற்றது

குற்றங்களில் இரு வகை உண்டு
நாம் செய்யும் குற்றத்தால் பிற உயிர்(கள்) பாதிக்கப்படுதல்
பிற உயிருக்கு பாவம் செய்யாத குற்றங்கள்
முன் சொன்ன குற்றங்கள் “பெரும்பாவங்கள்” ஆகும்
சக மனிதனுக்கும் அவனது உயிருக்கு உடைமைக்கு குற்றம் புரிதல்
கொலை
கொள்ளை
கற்பழிப்பு
பழிவாங்கல்
துரோகம்
பாரபட்சம்
நிற/இன/மத/மொழி/நில வெறி
மேற்சொன்னவை சக மனிதனுக்கு செய்யும் குற்றங்களுள் முக்கியமானவை.
பிற உயிர்களுக்கு பாதகம் செய்யாத குற்றங்கள் உண்டு.
இவற்றில் பின் சொன்ன பிற உயிருக்கு பாதகம் விளைவிக்காத குற்றங்களை நாம் அனைவரும் சொல்லாலும் செயலாலும் எண்ணங்களாலும் நாள்தோறும் செய்து தான் வருகிறோம்
அத்தகைய குற்றங்களை நமக்கு தெரிந்தவர் செய்திருந்தாலும் அவற்றை பகிரங்கப்படுத்தி தோண்டித்துறுவிக்கொண்டே இருக்கக் கூடாது.
அதைக் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்.
கணவன் மனைவியிடத்தில்
மனைவி கணவனிடத்தில் இடையே தோன்றும் உறவு இடற்பாடுகள் இது போன்ற சில பிழைகளால் ஏற்படுவதுண்டு.
அதை அப்படியே கடந்து விடவே நபிகள் நாயகம் போதிக்கிறார்கள்
ஒருவர் தவறை மற்றொருவர் பகிரங்கப்படுத்துவதை விட்டும் திருக்குரான் தடுக்கிறது.
இதை இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பதற்கு  ஈடானதாக்குகிறது.
ஒருவரது சிறு குற்றங்களை நாம் மறந்து மன்னிக்கும் போது  , இறைவன் நமது பெரும்பாவங்களை மறந்து மன்னிக்கிறான்.
ஒருவர் என்றோ அறியாமல் பேசிய வார்த்தைகளை பிடித்துக்கொண்டு
மீண்டும் மீண்டும் ரீப்ளே செய்து..
நீ ஏன் அப்படி பேசினாய்?
நீ ஏன் அன்று அப்படி நடந்து கொண்டாய்?
என்று ஒருவர் செய்து சிறு குற்றத்தை வைத்தே கதை நடத்திக்கொண்டிருந்தால் வாழ்க்கை இருளாகிவிடும்.
நம் சொந்தங்கள் , சக மனிதர்கள் செய்யும் , பேசும் விதங்களில் நம்மை பல நேரங்களில் காயப்படுத்தியிருக்கலாம்
அவற்றை என்றென்றும் கூறிக்கொண்டே இருக்காமல்
அதை மறந்து , மறைத்து அடுத்த விசயங்களுக்கு நகர்வது சிறப்பு.
நம் பிழைகளை பொறுப்பவன் இறைவன்
சக மனிதர்களின் பிழைகளை நாம் பொறுக்கும் வரை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *