முன்பெல்லாம் வயதானால் மட்டுமே வரும் மூட்டு வலி , இடுப்பு வலி, கழுத்து வலி எல்லாம் இன்று முப்பது வயதிலே ஆரம்பித்து விட்டது. தொழில் , உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல், உணவுப்பழக்கம் , அதிக எடை வரும் போது , உடல் எடையை தாங்கும் கால் எலும்புகள் பலகீனமாகி தேய ஆரம்பிக்கிறது. போதிய கால்சியம் , பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் டி என எலும்புகளுக்கு வலு சேர்க்கும் சத்துக்கள் இல்லாததால் மூட்டுக்கள் தேய்மானம் அடையும்.

பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் மூட்டு வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும்.
இந்த நிலையில் தேய்ந்த எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் வலியே மூட்டுவலியாகும்.
மூட்டுவலி ஆரம்பக்காலத்தில் நோய்க்கான காரணங்கள் அறிந்து அதனை நிவர்த்தி செய்தாலே போதும் குறிப்பாக உடல் எடை , கால்சியம் குறைபாடு என்றால் எடையைக் குறைத்து , கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குறையும்.மருத்துவர்களின் அறிவுரையும் வெளிப்பூச்சாக எண்ணெய்களை பூசும் போது வலி குறையும்.
- வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும்.
- விளக்கெண்ணைய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி பொறுக்கும் சூட்டில் வலி உள்ள பகுதிகளில் தேய்க்கவும்.
- சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டலாம்.
- சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் பத்துப் போடலாம்.
- எருக்கிலையை வதக்கி வெள்ளைத் துணியில் வைத்து வலி உள்ள பகுதிகளில் கட்டவும்.
- கொட்டம்சுக்காதி போன்ற மூலிகை தைலங்களை வாங்கி தேய்த்து வரும் போது வலி குறையும்.
உணவுகளை தேர்வு செய்து உண்ணலாம் :
- பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து கஞ்சி போல நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
- கறுப்பு உளுந்தை மாவாக்கி களி செய்து சாப்பிடலாம்.
- தேங்காய் பாலுடன் , உளுந்து மாவைச்சேர்த்து கஞ்சி செய்து குடிக்கலாம்.
- சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.
- கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
- ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.
- ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
- இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
- முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .












Leave a Reply