லேஸி ஸ்பெஷல் சிக்கன் கறி!

சமைக்க அலுப்பாக இருக்கும் போது அல்லது புதிதாக சமைக்க கற்றுக் கொள்ளும் போது , பேச்சிலர்கள் என அனைவரும் எளிதாக செய்யலாம். நிறைய மசாலா இல்லாமல் எளிதாக அதேசமயம் விரைவாக செய்து விடலாம் என்பது தான் இந்த ரெசிபியின் சிறப்பு.

தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
தக்காளி -2
பெ.வெங்காயம் -2
தேங்காய் துருவல் -1/2 மூடி
புளிக்காத தயிர் -2 குழிக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் – தேவைக்கு
அரைக்க :
கொத்தமல்லி விதை -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
சோம்பு -1/2 ஸ்பூன்
மிளகு -1/2 ஸ்பூன்
வரமிளகாய் -4
கறிவேப்பிலை – 2 இணுக்கு
பட்டை -1
கிராம்பு -2
பிரியாணி இலை
கல்பாசி
அன்னாசி மொக்கு
செய்முறை :
  • வாணலியில் எண்ணெய் விடாமல் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும்.
  • அதே வாணலியில் துருவிய தேங்காயை சிவக்க வறுத்து எடுத்து நைஸாக அரைக்கவும்.
  • பெரிய வெங்காயம் , தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு பொடித்த பொடியை போடவும். தீயை குறைத்து வைக்கவும். இதில் கறிவேப்பிலை , நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டவும். பிறகு இரண்டு குழிக்கரண்டி தயிர் சேர்த்து கொள்ளவும்.
  • உப்பு , மிளகாய் தூள் அரை ஸ்பூன் , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • தேங்காய் அரைத்ததை சேர்த்து கொள்ளவும்.
  • தேவையெனில் அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.  குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் வரும் வரை வைக்கவும்.
குறிப்பு:
தேங்காய் சேர்த்தாமல் செய்தாலும் நன்றாக இருக்கும். தேங்காய் சாதம் , புலாவ் உடன் இந்த சிக்கன் கறி நல்ல காம்பினேஷன். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *