ஹோட்டல் ஸ்டைலில் சூப்பரான ஹனி சில்லி பொட்டேடோ!

நாண், ப்ரைடு ரைஸ் , புலாவ்,சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஹனி சில்லி பொட்டேடோ. குழந்தைகள் ஆசையாக சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – கால் கிலோ
உப்பு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
அரிசி மாவு – 5 டீஸ்பூன்
மைதா
எண்ணெய் –  5 ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 3½ டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 3 பல்
பச்சைமிளகாய் – 4
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1/4
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் -1/2 டீஸ்பூன்
 மிளகுத்தூள் –  1/2 டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் -2 டீஸ்பூன்
 தேன் –  2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன்
+ 2 டீஸ்பூன் தண்ணீர்,
ஸ்பிரிங் ஆனியன் – சிறிது.
செய்முறை :
  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக நறுக்கிய கொள்ளவும்.
  • ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
  • குடைமிளகாய், வெங்காயத்தை தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.  குழைவாக வெந்து விடக்கூடாது.
  • இந்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
  • மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர்  ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • இந்த மாவில் உருளைக்கிழங்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • வெறும் வாணலியில்  எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, சோயாசாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், டொமேட்டோ கெட்சப், தண்ணீர்  ஊற்றி கொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் வெங்காயத்தாள் வறுத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். ஓரளவிற்கு சூடு ஆறியதும் தேன் சேர்த்து கலக்கவும்.
சூப்பரான டேஸ்டியான ஹனி சில்லி பொட்டேடோ ரெடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *