தேமலா கவலை வேண்டாம்? தீர்வுகாண வழி இதோ !

சருமம் பாதிப்பில் தலையாயப்பிரச்சனை தேமல் தான்.
இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒன்று. பல்வேறு விதமான சிகிச்சை முறைகள் செய்து சலித்து போனவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல சில எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

  • பூவரசக்காய்கள் :
பூவரச மரத்தில் கிடைக்கும் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை தேமல் உள்ள இடங்களில் பூசி வர தேமல் அகலும். முதலில் சிறு இடத்தில் செய்து பார்த்து பிறகு மற்ற இடங்களில் முயற்சி செய்யலாம்.
  • அருகம்புல் :
அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல் சாறு அடிக்கடி அருந்தி வரலாம்.
 அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.
  • வேப்பிலை :
வேப்பிலைகளை அரைத்து பூசிக்குளிப்பது சிறந்த வழி.வாரம் ஒரு முறை இளம் வேப்பிலைகளை அரைத்து அதிகாலை வெறும் வயிற்றில் அருந்தலாம்.
  • ஆரஞ்சுதோல் :
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் பாசிப்பயறு மாவுடன் தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும்.
எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.
  • நன்னாரிவேர் :
நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் உடல் கழிவுகள் வெளியேறும் போது நாளடைவில் தேமல் குறையும்.
  • எலுமிச்சைதோல் ;
எலுமிச்சைத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.
  • மஞ்சள் :
மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும் . துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.
  • துளசிஇலை :
சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குறையும். மேலும், சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.
  • கீழாநெல்லி :
கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.
  • கருங்சீரகம் :
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூசினால் சொறி, தேமல் குறையும்.
  • வெள்ளைப் பூண்டு:
வெள்ளைபூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
  • தேங்காய்எண்ணெய் :
தேங்காய் எண்ணெய் ,தேன் எடுத்துக் கொண்டு எண்ணெயை சூடு செய்து  தேனையும் அதில் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.
  • முட்டையின்வெள்ளைக்கரு :
முட்டையின் வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்தும் தடவலாம்.
 தேமல் குணமாகும். குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது. வேப்பிலைகளை அரைத்துத் தேமல் மீது தடவிவர தேமல் குறையும்.
  • குப்பைமேனிகீரை :
குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
  • மணத்தக்காளிகீரை :
கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்.
உடலில் இருந்து அன்றாடம் கழிவுகள் வெளியேறினாலே சரும நோய்கள் வராது.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *