சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகளில் கோவக்காயும் உண்டு.
கோவக்காயில் இரும்பு சத்து உள்ளது என்பதால் இதை சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கிறது.

- வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காயை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்க உதவும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
- கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.
- இதய நலத்திற்கும் , ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைக்க, இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் உதவுகிறது.
வழக்கமாக செய்யும் கோவைக்காய் பொரியல் அல்லாமல் புதிதாக கோவக்காயில் ஜீஸ் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோவைக்காய் – 1 00 கிராம்
இஞ்சி – 1 துண்டு
எலுமிச்சை சாறு – 1/2 மூடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – 2 இருக்கு
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை :
- முற்றாத நடுத்தரமான கோவைக்காயை வாங்கி , சுத்தமாக கழுவி , பழுத்த பழங்களை நீக்கி விடலாம். தரமானவற்றை
பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மிக்ஸியில் இஞ்சி துண்டு, கொத்தமல்லி , கருவேப்பிலை , உப்பு எலுமிச்சை சாறு கலந்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு இதனை வடிகட்டி அப்படியே குடித்தாலும் சரி அல்லது தண்ணீர் சேர்த்து பருகலாம்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி சாறு இது.
- உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் இதனை காலை உணவாக குடிக்கலாம். உடலின் கழிவுகள் வெளியேறி விடும் மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும். எனவே விரைவில் உடல் எடை குறையும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.












Leave a Reply