வெங்காயம் பச்சையாக உண்டால் பலன்கள் கிடைக்குமா?

  • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  • வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

  • வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயத்தை சாறெடுத்து மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
  • வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
  • வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
  • வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.
  • திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
  • வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
  • வெங்காயத்தில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
  • வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
  • வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
  • தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை குடித்து வர நுரையீரல் சுத்தமாகும்.
  • நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
  • ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
  • காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்று தின்ன காலரா தாக்காது.
  • சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதனை
தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி அந்த இடத்தில் தேய்த்துவர முடிவளரும்.
  • காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் உணவில் வெங்காயம் சாப்பிட்டுவர வேண்டும்.
 வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
  • தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
  • வெங்காயத்தை சாறெடுத்து அதனுடன் சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் வெளிப்பூச்சாக தடவவும். தொண்டை கட்டு குணமாகிவிடும்.
  • மலச்சிக்கல் குணமாக வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட வேண்டும்.
  • வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட கடுமையான தலைவலி குறையும்.
  • மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் சாப்பிடுவது நல்லது.
  • சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து குடித்தால் கொழுப்பை உடனே கரைக்கும்.
  • வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல்   குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *