சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய சவால் என்பது என்ன உணவு உண்பது தான். வழக்கமாக தட்டு நிறைய சோறு, நான்கைந்து இட்லி , முறுகல் தோசை என்று மூன்று வேளை உணவுகளையும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளாக உண்டு தான் சர்க்கரை நோய் விகிதம் நமது நாட்டில் அதிலும் உணவில் அரிசியை பிரதானமாக கொண்ட தென்னிந்தியாவில் அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்னவென்றால் உணவு மற்றும் வாழ்வியல் முறைகளால் இந்த நோயினை மூட்டைக் கட்டி அனுப்பி விடலாம்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து , புரதம் மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன்மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைக் குறைக்க இயலும். ஒவ்வொரு முறை உணவிலும் எந்தெந்த சத்துக்கள் உள்ளன என்று ஆராய்ந்து உண்ண முடியாது. அதற்கு பதிலாக சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவுகள் செய்முறையை பட்டியலாக எடுத்து வைத்துக் கொண்டு அதனைக் கொண்டு ஒரு உணவுத் திட்டம் தயாரிக்கும் போது உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க எளிதாக இருக்கும். வித்தியாசமான சுவையில் சில ரெசிபிகளைப் பார்ப்போம்.
மூங்கில் அரிசி
மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்.
மூங்கிலரிசி கிச்சடி
மூங்கிலரிசி – 1 கப்
இஞ்சி , பூண்டு விழுது-1 ஸ்பூன்
பாசிப்பருப்பு – 1 கைப்பிடி
பச்சைப் பட்டாணி
பீன்ஸ்
கொத்தமல்லி
புதினா
பச்சை மிளகாய்
தாளிக்க :
கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, எண்ணெய்
செய்முறை : இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மூங்கிலரிசியை ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை , வரமிளகாய் கிள்ளி போட்டு தாளிக்கவும்.
- அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது , நறுக்கிய வெங்காயம் , பட்டாணி , பீன்ஸ் , காலிஃபிளவர், பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த கொத்தமல்லி , புதினா , பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- மூங்கில் அரிசிக்கு 1:3 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
- குக்கரில் மெல்லிய தீயில் மூன்று விசில் விடவும். நன்கு குழைவாக வேக வில்லை என்றால் மறுபடியும் அரைகப் சுடுதண்ணீர் சேர்த்து ஒரு விசில் வைக்கவும்.
மூங்கில் அரிசி நார்ச்சத்து நிறைந்த உணவு. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டும் அல்ல எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இதனால் மூட்டுவலி குறையும்.
ஆரம்பத்தில் இதன் சுவை எப்படியோ இருக்கும் என்றாலும் பழகிவிடும் போது மூங்கில் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.
வழக்கமாக அரிசி சோறு போல குக்கரில் வேக வைத்து , மற்றவர்களுக்கு செய்த குழம்பு கூட்டு , தயிர் என்று வெளுத்து கட்டலாம்.












Leave a Reply