அல்சரா? இந்த காய்கறி குருமா சாப்பிடுங்கள்!

அல்சருடன் அவதிப்படுபவர்கள் காரம் அதிகமாக உண்ணமுடியாது. அவர்களுக்கு ஏற்ற காரம் , புளி இல்லாத குருமா இது. இதில் தேங்காய் பால் சேர்த்துவதால் வயிற்று புண் கூட ஆறும்.

வெள்ளை காய்கறி குருமா:
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம்-1
தக்காளி- 3
உருளைக்கிழங்கு-2
பீன்ஸ்-50கிராம்
காரட்-50கிராம்
பட்டாணி-50கிராம்
பச்சை மிளகாய்-5
தேங்காய்துருவல்– 1 கப்
கசகசா-அரை  ஸ்பூன்
சோம்பு-1  ஸ்பூன்
முந்திரி பருப்பு  – 5
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்  – 5 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை :
கிராம்பு
பட்டை
ஏலக்காய்
செய்முறை:
  • முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை  காய்கறிகள்  அனைத்தையும்  பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பச்சை மிளகாய் தேங்காய்துருவல்  கசகசா    சோம்பு   முந்திரி பருப்பு  அனைத்தையும்  சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • கசகசா , சோம்பு இரண்டையும் சுடுதண்ணீரில் ஊறவைத்து பின் அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், போட்டு தாளித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதனுடன்  இஞ்சி பூண்டு பேஸ்ட்    நறுக்கிய  காய்கறிகள்   சிறிதளவு உப்பு  சேர்த்து  நன்கு வதக்கி  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
  • காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில்  சேர்த்து    நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
 சுவையான வெஜிடபிள்  வெள்ளை  குருமா ரெடி.. ஆப்பம் , இடியாப்பம், தோசை , இட்லிக்கு நல்ல காம்பினேஷன்.இதே முறையில் செய்யும் சொதி கூட சுவையோ சுவை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *