சமையலறை டிப்ஸ் பாகம் -4

சின்ன சின்ன மெனக்கிடல்கள் சமையல் வேலையை எளிதாக்கும்.

பஜ்ஜி மாவில் இரண்டுமூன்று பூண்டு பற்களை அரைத்தும்  அரை டீஸ்பூன் சீரகத்தைப் பொடித்தும் போட்டு பஜ்ஜி செய்தால் பஜ்ஜி நல்ல சுவையுடனும் இருக்கும் கடலை மாவினால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்படாமல் தடுக்கும்.
  • உளுந்துவடை மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க அரைத்த மாவில் இருந்து கொஞ்சம் கிள்ளி தண்ணீரில் போடுங்கள் சரியான பதம் என்றால் மாவு தண்ணீரில் மிதக்கும் கெட்டியாக அரைத்திருந்தால் நீரில் மூழ்கிவிடும் மிகவும் நீர்க்க அரைத்திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும்.
  • முட்டையை கொதிக்க வைத்த தண்ணீரில் 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
  • தோசை வராமல் இருந்தால்….தோசை சுடும் போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
  • தயிர் சக்கையும் தண்ணீருமாக இருக்கிறதா? தயிர்ப்பச்சடி அவியல் முதலியவற்றில் சேர்க்க கெட்டித் தயிர் தேவை ஒரு சுத்தமான மெலிதானே  காட்டன் துணியே எடுத்து தயிரை அதில் மெதுவாக ஊற்றுங்கள்  நீர் மட்டும் துணி வழியாக வெளியேற  கெட்டித் தயிர் மேலே தங்கிவிடும் துணியைக் கவிழ்த்து கெட்டித் தயிரை எடுத்துக்கொள்ளலாம்.
  • பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால் விரைவாக வேகும் அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.
  • கட்லெட் செய்யும் போது அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்­ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
  • சமையலுக்கு பயன்படுத்துகிற பாத்திரம் அகலமாகவும் உயரம் குறைவாகவும் இருந்தால் சமையல் சீக்கிரம் முடியும்.
  • மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும்.
  • முடக்கத்தான் கீரையை எப்படித் தேர்வு செய்வது? மஞ்சள் அல்லது பழுப்பு நிற இலைகள் இல்லாமல் பச்சைப் பசேலென இருக்க வேண்டும் கீரைக்கட்டே கையில் எடுத்துப் பார்த்தால் வாடி வதங்கி இருக்கக்கூடாது ரொம்பவும் இளசான கீரை என்றால் அதைத் தண்டுடனேயே சேர்த்து சமைக்கலாம்.
  • சாம்பார் தண்ணீராக இருந்தால்… சாம்பார் தண்ணீராக இருந்தால் பொரிகடலையை( பொட்டுகடலை ) மிக்ஸியில் திரித்து சாம்பாரில் சேர்க்கலாம் சாம்பார் கெட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.
  • பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால் விரைவாக வேகும் அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *