கமகமக்கும் புலாவ் செய்வது இவ்வளவு சுலபமா?

மசாலாக்கள் நிறைந்த பிரியாணி குழந்தைகள் , வயது முதிர்ந்தவர்களால் உண்ண முடியாது. ஆனால் புலாவ் என்பது அதே வாசனையுடன் எவரும் எந்த வயதிலும் உண்ணலாம். இந்த தேங்காய் பால் புலாவுடன் நல்ல காரசாரமான சிக்கன் , மட்டன் மற்றும் முட்டைக்கறி இருநாநாலே போதும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்..
 பாஸ்மதி அரிசி -1 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் – 3-4
பிரியாணி இலை -2
பட்டை,கிராம்பு தலா இரண்டு
ஏலக்காய் -2-3
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
 தேங்காய் பால் -1/2 கப்
கொத்தமல்லி , புதினா
முந்திரி ஒரு கை பிடி
 தண்ணீர் -1 1/2 கப்
உப்பு தேவைக்கு
நெய் -2 டேபிள் ஸ்பூன்
 ரோஸ் வாட்டர்
எண்ணெய்
செய்முறை..
  • அரிசியினை நன்றாக அலசி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  •  வெங்காயம், தக்காளியினை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்
  • பாத்திரத்தில் எண்ணெய் , நெய் ஊற்றி காய்ந்த பின்பு நறுக்கிய ஒரு வெங்காயத்தினை மட்டும் போட்டு நல்ல பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் முந்திரியும் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்
  • குக்கரில் பொரித்த எண்ணெயினை ஊற்றவும் அதில் ரம்பை இலை(panden leaves), பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  • அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடி பிடிக்காமல் சிம்மில் வைத்து கலந்துவிடவும்
  • பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பொடிசாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து கலந்து, பிறகு அதில் தேங்காய் பால் , தண்ணீர் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும்.
  • நன்றாகப் தண்ணீர் கொதிக்கும் பொழுது ஊறவைத்த அரிசியினை சேர்த்து கிண்டிவிட்டு குக்கரை மூடி  மென்மையான தீயில் வைத்து அணைக்கவும்.
  • 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து குஸ்காவின் மீது ரோஸ் வாட்டர் சுற்று வரை ஊற்றி மெதுவாக சாதம் குழைந்து விடாமல் மரக்கரண்டி வைத்து கிளறிவிடவும்.
பொரித்து வைத்த வெங்காயம், முந்திரி போட்டு பரிமாறவும்.
சுவையான தேங்காய் பால் புலாவ் ரெடி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *