டிரை ப்ரூட் எனப்படும் உலர்ந்த பழங்கள் உடலுக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்து உள்ளது. உலர் பழங்களாக கொடுத்தால் குழந்தைகள் சரியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களை சாப்பிட வைக்க எளிய வழி தான் சில்லென்ற மில்க் ஷேக்!

தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம் – 5,
அத்திப்பழம் – 2,
உலர்ந்த திராட்சை – 20,
பாதாம் – 5,
வாழைப்பழம் – 1,
காய்ச்சி ஆற வைத்த பால் – 250 மி.லி.,
தேன் – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பேரீச்சை முதல் பாதாம் வரை எல்லாவற்றையும் 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊறியவற்றை மிக்சியில் வெண்ணெய் மாதிரி அரைக்கவும்.
பிறகு அரைத்த விழுதுடன் வாழைப்பழம், பால் சேர்த்து நன்கு அடித்து, தேன் கலந்து பரிமாறவும்.
காலை உணவைத் தவிர்க்கிற குழந்தைகளுக்கு இது மிகச் சரியான மாற்று.
இரும்புச் சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், கொழுப்பு என எல்லா சத்துகளும் நிரம்பிய முழுமையான உணவு.வாழைக்கு பதில் ஆப்பிள், தேனுக்கு பதில் சுகர்ஃப்ரீ அல்லது இனிப்பு சேர்க்காமல், கொழுப்பு நீக்கிய பால் சேர்த்து, இதையே டயட்டில் இருக்கும் நபர்களும் குடிக்கலாம்.
‘ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட உடலுக்கு தேவையான சத்துக்களும், அது தரும் பலன்களும் மிக அதிகம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் இவற்றை டிரைப்ரூட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.
அதிக அளவிலான சத்துகளைத் தரவல்ல டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை வேலைக்குச் செல்வோர் உணவுப்பையில் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக இதனைக் கொடுத்தனுப்பலாம். டிரை ப்ரூட்ஸ் பர்பி , அல்வா , லட்டு என குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இவற்றின் விலை அதிகம்தான் என்றாலும், பேக்கரி உணவுகள், துரித உணவுகளின் விலையினை பார்க்கும் போது இது ஒன்றும் பெரிதில்லை.
சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு முடிந்த அளவேணும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை சாப்பிடலாம்”












Leave a Reply