எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாத உடல்வாகு கொண்டவர்கள் வரம் வாங்கி வந்த மனிதர்கள். ஆனால் பெரும்பாலும் உடல் எடையை சுமந்து கொண்டு வியாதிகளுடன் திரிபவர்களே அதிகம். ஆரம்பகால உடல் எடை என்பதை சில எளிய வீட்டு குறிப்புகள் மூலம் குறைக்கலாம்.

உடல் உடையை எவ்விதம் குறைக்க வேண்டும்?
- ஜங்க் புட், ரெடிமேட் புட் , பேக்கரி உணவுகள் இல்லாத சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- உண்ணும் உணவில் இருந்து பெறப்படும் கலோரி மதிப்புகளை ஆற்றலாக எரிக்கும் அளவுக்கு உடற்பயிற்சி , வேலைகள் இருக்க வேண்டும்.
- மெட்டபாலிசத்தை தூண்டி செரிமானத்தை சீராக்க வேண்டும்.
- உடல் எடை அதிகரிக்கும் வகையில் உள்ள ஹார்மோன் கோளாறுகள் இருந்தால் அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
எளிய குறிப்புகள் :
- இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
- கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
- சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு,1கிராம் அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
- பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
- எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
- நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
உணவில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், வெள்ளரி என அனைத்து கொடியில் காய்க்கும் காய்கறிகள். தர்பூசணி, கொய்யா, பப்பாளி, ஆப்பிள் , ஆரஞ்சு
புரூகோலி, ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.












Leave a Reply