அதிக எடை என்பது பெரும் பிரச்சினை. எடை ஏறுவதை உணரும் போது தான் தோன்றும் நமக்குரிய சராசரி எடையை தாண்டி விட்டோம் . அதற்கடுத்து உடல் எடை குறைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் புஸ்வாணம் போலத்தான்.பத்து நாட்கள் தான் மனக்கட்டுப்பாடு பிறகு பழைய படி தான்.ஆனால் எளிய ஒரு கைவைத்தியம் மற்றும் இதனுடன் நடைப்பயிற்சி , உணவு கட்டுப்பாடு சேரும் போது உடல் எடை விரைவில் குறையும்.அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
சுக்குப்பொடி
மஞ்சள் தூள்
கருஞ்சீரகம்
எலுமிச்சை சாறு
தேன் (தேவைப்பட்டால்)
செய்முறை:
ஒரு டம்ளர் நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம். இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதனை கொதிக்க வைத்து பிறகு
அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.
எப்படி குடிக்க வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் தவறில்லை. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.
எவ்வளவு நாள் குடிக்கணும்?
நீங்கள் குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாள்களிலேயே உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.இந்த குடிநீரை ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் குடித்து வரலாம். அப்படி ஒரு மாதம் முழுவதும் குடித்து வந்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும். பக்கவிளைவுகள் இல்லாத மற்றும் பெரும் பொருட்செலவோ இல்லாததால் நமக்கான ஐடியல் வெயிட் அல்லது ஒரு சிறு இடைவெளி விட்டு பிறகு குடிக்கலாம்.
இந்த குடிநீர் வேலை செய்யும் விதம் :
கருஞ்சீரகம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் மேலும் சர்க்கரையை கட்டுப்படுத்தும். சுக்குப்பொடி செரிமானத்தை தூண்டும்.மஞ்சள் தூள் சிறந்த சர்வரோக நிவாரணி. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மேலும் ஒட்டுமொத்த உறுப்புகளும் மஞ்சள் தூளால் புத்துணர்ச்சி பெறும். எலுமிச்சை மெட்டபாலிசத்தை தூண்டுவதால் விரைவில் உணவு செரிமானம் அடைகிறது. இதிலுள்ள விட்டமின் சி உடலுக்கு நல்லது.














Leave a Reply