தலைவலியா இதை செய்து பாருங்கள்!

தலைவலியும் , பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று பழமொழி இருக்கும் போதே புரிந்து கொள்ள வேண்டும் தலைவலி எத்தனை கொடுமையானது என்று.வேறு ஏதேனும் தீவிர காரணங்களால் வரும் தலைவலிக்கு கண்டிப்பாக உரிய மருத்துவச் சிகிச்சை வேண்டும். ஆனால் சைனஸ் , டென்ஷன் , வெயில் , பதட்டத்தால் வரும் தலைவலிகளுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் கை வைத்தியம் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

  • சம பங்கு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது தலைவலியைக் குறைக்கும். இஞ்சி இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கும்.
  • சுக்குப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பத்து போடலாம்.
  • பெப்பெர்மிண்ட் எண்ணெயின் மணம் மூளையின் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மூன்று துளி பெப்பெர்மிண்ட் எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெயோடு கலந்து தலையிலும், பின்னங்கழுத்திலும் தடவி தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • இலவங்கப் பட்டையைப் பொடி செய்து நீர் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.
  • கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும்.
  • இரு துளி கிராம்பு எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலந்து கடல் உப்பு சேர்த்து நெற்றியில் மிதமாக மசாஜ் செய்தால் தலைவலி சரியாகும்.கிராம்பில் உள்ள வேதிப்பொருட்கள் சிறந்த வலிநிவாரணி.
  • நான்கு துளசி இலைகளை ஒரு கோப்பை கொதிக்கும் நீரில் போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் விடவும். பின்பு தேன் சேர்த்து அதனை அருந்தவும்.
  • சைனஸ் தொல்லையால் தலைவலி என்றால் திருநீறை நீரில் குழப்பி வலி உள்ள இடங்களில் தடவ வேண்டும். விபூதியானது நீர்க்கோர்வையை உறகஞ்சிக்கொள்ளும்.
  • மக்னீசியம் குறைபாடு தலைவலியோடும், ஒற்றைத் தலைவலியோடும் நேரடித் தொடர்புள்ளது. ஆகவே பாதாம், எள், ஓட்ஸ், முந்திரி, முட்டை, பால், சூரியகாந்தி விதைகள் போன்றவை அதிக மக்னீசியம் கொண்டவை, எனவே இவற்றை உட்கொண்டால் தலைவலிக்கு உடனடியாக பலனளிக்கும்.
  • தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோர் தினமும் காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் தேனை மிதமான சூட்டில் உள்ள நீருடனும், 2 டேபிள்ஸ்பூன் தேனை உணவு உண்பதற்கு முன்பும் அருந்த வேண்டும்.
  • பால் இல்லாத கடுங்காப்பி கூட தலைவலியை குணமாக்கும்.
  • இஞ்சி சேர்த்த டீ தலைவலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *