உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வெண்மைநிற சொர்க்கம்.
காதலின் சின்னமான தாஜ் மஹால் , 1 4 வது பிரசவத்தில் இறந்து போன மூன்றாம் மனைவிக்காக கட்டிய நினைவு சின்னம் என்று நம் எல்லோருக்கும் தெரியும் . பாரசீக ,முகலாய கட்டிட மரபுகளைக் கொண்டது .சொர்க்கத்தில் உறங்கும் உலகின் மஹா சக்கரவர்த்தி தன் காதல் மனைவியுடன் அருகருகே நினைவுசின்னங்களாக நமக்கு காட்சி தருகின்றார் .

இறுதி தீர்ப்பும் தாஜ்மஹாலும்:
கடவுளின் நிழல் , காவல் தலைவன் என்று தனக்கு தானே பெயர் சூட்டிக் கொண்ட ஷாஜஹான் , மனிதனின் இறுதி நாளான தீர்ப்புநாளினை பற்றியும் ,அதன் பயங்கரத்தையும் உலக மக்களுக்கு உணர்த்த , தாஜ் மகால் சுவரெங்கும் குரானின் வரிகளை வனப்பு எழுத்துகளாக செதுக்கப் பட்டுள்ளது . தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் “துலுத்” எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான “அமானத் கான்”, என்பவர் உருவாக்கியுள்ளார்.
இவ்வனப்பெழுத்துக்களை சலவைக்கல்லில் செதுக்கி சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கியுள்ளார்கள்.
இறைவனின் அரியாசன நகராகவே தாஜ் மகால் இருக்க வேண்டும் என்று ஷாஜஹான் எண்ணினார் . ஆகவே தான் தீர்ப்பு அளிக்கும் நாளின் பயங்கரத்தைப் பற்றி காதல் மனைவியின் நினைவு மாளிகையில் எச்சரித்து இருந்தார் .
சிறைக்காலம்:
ஷாஜஹானின் வீழ்ச்சி தன் நான்கு மகன்களும் ஒருவருக்க்ருவர் பதவி ஆசையில் அடித்து கொள்வதில் ஆரம்பித்தது .மற்ற மூன்று சகோதர்களையும் கொன்று ,
இறுதியில் அரியாசனத்தை பிடித்தது ஒளரங்கசிப் தான்.
ஒளரங்கசிப் பதவியேற்றதும் தன் தந்தையை சிறைபடுத்தினர் . சிறையில் கொடுமையெல்லாம் படுத்த வில்லையாம் , தன் பிற மனைவிகள் ,அந்தப் புற பெண்கள் ,பணியாளர்கள் என தனி மாளிகையில் தன் கடைசி காலத்தை கழித்துள்ளார் .
தோட்டத்தின் அழகு;
1 9 ம் நூற்றாண்டு இறுதியில் லார்ட் கர்சன் பிரபுவால் மறு சீரமைக்கப் பட்டது தான் இன்று நாம் காணும் வெளிப்புற தோட்டமானது கர்சன் பிரபுவால் பிரிட்டிஷ் மரபு முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டு இறுதியில் கட்டப்பட்ட வெண் சலவைக் கல் மாளிகை , இயற்கை சீற்றங்கள் , அந்நிய கொள்ளையர்களின் ஆக்கிரமிப்பு எல்லாவற்றையும் தாண்டி இன்றும் நிலைத்து நிற்பதால் , அதன் பின் இருப்பது ஏதொ ஒரு தெய்விகச்சக்தியா இல்லை அன்பின் சக்தியா தெரிய வில்லை .
சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து:
“இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்.”














Leave a Reply