இட்லிக்கு இத்தனை வகை சட்னியா?

எத்தனை விதமான உணவுவகைகள் இருந்தாலும் நமது இட்லி , தோசைக்கு ஈடாகாது. ஒரே மாதிரி சட்னியாக இல்லாமல் விதவிதமாக சட்னி செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளியுடன் சேர்த்து அரைத்த புதினா சட்னி அருமையாக இருக்கும். இதுபோன்ற வித்தியாசமான சுவையில் இருக்கும் சட்னிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

தக்காளி – புதினா சட்னி
தேவையான பொருட்கள் :
தக்காளி – 2,
புதினா – 1/4 கப்
இஞ்சி – சிறிய துண்டு
வர மிளகாய் – 8( ருசிக்கேற்ப)
பெரிய வெங்காயம் – ஒன்று
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க :
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி… புதினா, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக போட்டு வதக்கவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.
சுவையான தக்காளி புதினா சட்னி ரெடி.
கொள்ளு வறுத்து அரைத்த சட்னி:
கொள்ளு – 1 /2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
வர மிளகாய் – ருசிக்கேற்ப
பூண்டு – 4 பல்
புளி – சிறிது
உப்பு – 1 ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் , கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை , சின்ன வெங்காயம் நறுக்கியது.
செய்முறை :
கொள்ளு பருப்பை  எண்ணெய் விடாமல் வறுத்து எடுக்கவும்
வறுத்த கொள்ளுடன் தேங்காய் , வரமிளகாய் , பூண்டு , உப்பு , புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த சட்னியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
வழக்கம் போல சட்னியை தாளிக்கவும்.
வரமிளகாய் சட்னி:
வரமிளகாய் – 15
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
பூண்டு -2
உப்பு – 1 ஸ்பூன்
புளி – சிறிது
நல்லெண்ணெய்
செய்முறை :
வரமிளகாயை தண்ணீரில் பத்து நிமிடம் ஊற விடவும்.
தோலுரித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளவும்.
கொடுத்திருக்கும் அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். இதற்கு எண்ணெய் கொஞ்சம் நிறைய சேர்த்தால் தான் ருசியாக இருக்கும். மொறுமொறுப்பாக தோசை சுட்டு இந்த சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இட்லிக்கும் அட்டகாசமான காம்பினேஷன். காரம் அதிகமாக உணர்ந்தால் சிறிது எண்ணெய் விட்டு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *