நமது உடற்கூறானது வாதம், பித்தம், கபத்தினால் ஆனது. வாதம் ஒரு பங்கும், பித்தம் ½ பங்கும், கபம் ¼ பங்கும் நமது நாடியில் ஒலித்தால் நோய் குறைபாடு இல்லையென நாம் அறிந்துகொள்ளலாம். இது சித்தர்களின் கூற்றாகும்.

நமது உடல் சரியாக இயங்க வேண்டுமெனில், ஐந்து வகை ஓட்டங்களான, இரத்தம், வெப்பம், காற்று, நிணநீர் மற்றும் ஜீவகாந்த ஓட்டங்கள் சரியாக இருக்க வேண்டும். இந்த ஓட்டங்களின் சமநிலை மாறுபடும் போது உடலில் சமச்சீர் நிலை மாறுகிறது..
நமது உடல் நன்றாக இயங்க உடலின்
இராஜ உறுப்புகளான :- இதயம், நுரையீரல், கல்லிரல், மண்ணீரல், சிறுநீரகம், மூளை முதலியனவும்
சுரப்பிகளான :- பிட்டியூட்ரி, பீனியல், தைராய்டு, தைமஸ், அட்ரீனல் ஆகிய சுரப்பிகளும் நன்றாக வேலை செய்யவேண்டும்.
இதோடு இல்லாமல் நமது உடல் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் உடலுக்குத் தேவையான இரத்தம் போதுமானளவு இருக்க வேண்டும். அந்த இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும். அதிலுள்ள அணுக்களின் விகிதாச்சாரம் சரியாக இருக்க வேண்டும்.
நமது உடலில் நோய் உருவாக காரணம் கழிவுகளே ஆகும். “கழிவுகளின் தேக்கமே நோய்”. உடலில் கழிவுகள் நாள்பட தேங்கும்போது நோயாக மாறுகிறது. இக்கழிவுகள் உடலில் தேங்கி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையானப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நம்மில் பலர் கழிவு என்பது மலக்கழிவை மட்டுமே பெரிதாக நினைகிறார்கள். உடலில் தங்கும் கழிவானது அஷ்ட கழிவாகும். நமது உடலில் மலம், சிறுநீர், சளி வியர்வை, கண் பீழை, வாந்தி, விந்து, இரத்ததில் உள்ள கழிவுகளும் சேர்த்து எட்டு வகையான கழிவுகளாகும்.ஆக இந்த எட்டுவகையானக் கழிவுகள் நாள்பட உடலில் தேங்கும்போது பெரிய நோய்களாக உருவெடுக்கிறது. இவ்வாறு கழிவுகள் தேங்கும் போதுதான் நமது உடல்கூறு உடலின் ஓட்டங்கள் இராஜ உறுப்புகள், சுரப்பிகள், இரத்தம் முதலியன பாதிப்பு அடைகிறது, எந்த ஒரு நோய்க்கும் நாம் மருத்து எடுக்கும் முன்பு இவற்றில் உள்ள கழிவுகளை முறையாக நீக்கவில்லையெனில், நமக்குரிய நோய்க்குறைபாடு ஒருபோதும் தீரவாய்ப்பில்லை.
நாம் கழிவுகளை முறையாக நீக்கியப் பின்பு மருந்துகள் உட்கொள்வோமாயின், எந்த ஒரு நோய்க்கும் மருந்துகள் முறையான தீர்வாக அமைகின்றது.
கழிவுகள் நமது உடலில் “உச்சி முதல் பாதம்” வரை தேங்கி நிற்கிறது. அவைகள் :
- தலையில் கெட்ட நீரேற்றமாகவும்
- நெஞ்சில் சளியாகவும்
- சிறுநீரகத்தில் அதிகப்படியான உப்புகளாகவும்
- வயிற்றில் நாள்பட்ட மலமாகவும்
- இரத்தத்தில் கிருமிகளின் தொற்றுகளாகவும்
- முழு உடலில் இரசாயனக் கலப்பாகவும்
- தோலில் வியர்வை நாள அடைப்பாகவும்
- கல்லிரலில் அதிகப்படியானப் பித்தமாகவும்
- வயிற்றில் அபன வாயுவாகவும் தங்கி உள்ளது.
இவ்வாறாக உடலில் உள்ள அனைத்துக் கழிவுகளையும் நீக்கும் போதுதான், உடலில் உள்ள நோய்க்கு மருந்துகள் நாம் எடுத்தாலும், யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், சத்தான உணவுப்பொருட்களை உட்கொண்டாலும் இவைகள் முழுமையாக நமது உடலைச் சென்றடையும். இல்லையெனில் உடலில் நோய்கள் நீடித்துக்கொண்டுதான் இருக்கும்..
இந்த உடற்கழிவுகளை நீக்கும்பொருட்டு சித்தர்களின் அறிவுரைகளின்படியும், நமது பாரம்பரிய சித்த மருத்துவ அனுபவ நுணுக்கத்துடனும் தயாரிக்கப்பட்ட மருந்துகளின் மூலம் நமது உடலில் உள்ள கழிவுகளை அகற்ற இயலும். இதற்கென முறையாகத் தயாரிக்கப்பட்டதே நமது அடிப்படை மருந்து (பேஸிக் மெடிசன்) என்னும் சித்த மருந்தாகும்.
இந்த அடிப்படை மருந்து பெட்டகத்தில் உள்ள 10-வகையான மருந்துப் பொருட்களை அதில் கூறியுள்ளபடி முறையாக எடுத்து கழிவுகளை நீக்கி, கவலையின்றி, உடல் நலத்துடன் வாழலாம். இம்மருந்தானது நோய் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டிய ஒன்றாகும்.இருப்பினும் சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
பத்து வகையான மருந்துப் பொருட்களின் பெயர்களும் அதன் பயன்களும் :-
1. உடல் சுத்தி சூரணம் :-
கல்லிரலில் உள்ள அதிகப்படியானப் பித்தத்தை வெளியேற்றும். அதேப் போல் கல்லிரல், குடலிலுள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
2. முத்தோஷப் பொடி:-
உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களை நிவர்த்திச் செய்கிறது.
3. இரத்த சுத்தி டானிக்:-
உடலிலுள்ள இரத்தம், உடல் அவயங்களிலுள்ள அனைத்துக் கெட்ட கிருமிகளையும் வெளியேற்றும்.
4. மூலிகைத் தேநீர்:-
கெட்ட மருந்துகளினால் உடலில் ஏற்பட்ட வீரியத்தையும், பூச்சி மருந்து, மற்றும் இரசாயன உறங்களினால் உடலில் ஏற்பட்டப் பாதிப்புகளைச் சரிசெய்கிறது.
5. சுவாச விருத்தி மாத்திரை
மூக்கு, தொண்டை மற்றும் நெஞ்சில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது.
6. நசியத் தைலம்:-
தலை மற்றும் மூக்கில் சேர்ந்திருக்கும் கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது.
7. வாயு சூரணம் :-
உடலில் உள்ள அபான(கெட்ட) வாயுக்களை வெளியேற்றுகிறது.
8. உதய ஜோதி:-
வயிற்றில் சேர்ந்திருக்கும் பழைய மலக் கழிவுகளை நன்கு வெளியேற்றுகிறது.
9. ஆவி மருந்து
வியர்வை நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்கி நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது.
10. சீரகாதி தைலம்
உடலில் ஓடக்கூடிய ஐந்து ஓட்டங்களான, இரத்த, வெப்ப, காற்று, நிணநீர் மற்றும் ஜீவகாந்த ஓட்டங்களை சரிசெய்கிறது.












Leave a Reply