“Russia Powerful Earthquake, Tsunami Warnings“
மாஸ்கோ, ஜூலை 30, 2025 – Tsunami Alert in Russia ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம்: சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை! ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இன்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் 2011 ஜப்பான் நிலநடுக்கத்துக்குப் பின்னர் ஏற்பட்ட மிகச்சிறந்த நிலநடுக்கங்களில்(earthquake ) ஒன்றாகும்.
நிலநடுக்கத்துடன் தொடர்புடைய 100 அடி உயர சுனாமி அலைகள் ரஷ்ய கடலோரங்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மக்கள் அடர்த்தி குறைவாக இருந்ததால் பெரும்பாலான இடங்களில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Tsunami Warning Highlights”

பசிபிக் நாடுகள் விழிப்பாக இருக்க உத்தரவு
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கம் காரணமாக ஜப்பான், அமெரிக்கா (அலாஸ்கா, ஹவாய்), கனடா, சீனா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, மெக்சிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மில்லியன் மக்கள் பாதுகாப்பாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை உலுக்கிய சாதி ஆணவக் கொலை
இந்தியாவுக்கு பாதிப்பு?
இந்தியாவில் இதுவரை சுனாமி தாக்கம் குறித்து எச்சரிக்கை இல்லை என சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியப் பெருங்கடலுடன் தொடர்புடைய பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
முக்கிய தகவல்கள்:
- நிலநடுக்க அளவு: 8.8 ரிக்டர்
- நடப்பிடம்: கம்சட்கா தீபகற்பம், கிழக்கு ரஷ்யா
- நேரம்: அதிகாலை 3:17 (உள்நாட்டு நேரம்)
- ஆழம்: 20 கி.மீ
- பாதிக்கப்பட்ட நாடுகள்: ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிலிப்பின்ஸ், பெரு மற்றும் பிற நாடுகள்
- சுனாமி அலை உயரம்: அதிகபட்சம் 100 அடி வரை
இஸ்ரோ–நாசா கூட்டுத் திட்டமான நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது
நிலவரம்:
தற்போது உயிரிழப்புகள் குறித்து உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பலர் காயமடைந்துள்ளனர். அதிகரிக்கும் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.”Russia Powerful Earthquake, Tsunami Warnings“
Leave a Reply